அவசர நிலை குறித்து விமானி எந்த தகவலும் வழங்கவில்லை – விமான போக்குவரத்து அமைச்சகம்
அஜித் பவார் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக, விமானம் அவசர சூழலில் இருப்பதாக விமானியால் எந்த முன் எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டதா என்பது குறித்து, கருப்புப் பெட்டி ஆய்வு செய்யப்பட்ட பின்னரே உறுதியான தகவல் கிடைக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், விபத்து நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதுடன், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது