உறுதியான தோழனை இழந்த சோகம் – முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உருக்கம்
தான் ஒரு மிக வலிமையான நண்பரை இழந்துவிட்டதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அஜித் பவாரின் மறைவு தனிப்பட்ட ரீதியில் தன்னை கடுமையாக பாதித்துள்ளதாகவும், அந்த இழப்பை எவ்விதத்திலும் ஈடு செய்ய முடியாது என்றும் கூறினார்.
இந்த துயரமான சம்பவம் மகாராஷ்டிரா மாநில மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட ஃபட்னாவிஸ், மாநில அரசின் சார்பில் மூன்று நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.