உலக எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது
உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் நிலையில் இந்தியா முக்கியமான இடத்தை அடைந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் பாராட்டியுள்ளது.
இந்திய எரிசக்தி வார விழா கோவாவில் நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபு அமீரக தொழில்துறை அமைச்சர் சுல்தான் அல் ஜபேர் கலந்து, தற்போதைய எரிசக்தி வர்த்தகத்தில் மூன்று முக்கிய மெகா டிரெண்ட்கள் ஆசியா மற்றும் இந்திய சந்தையை தீர்மானிக்கப்போவதாக குறிப்பிட்டார்.
கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் முக்கிய ஒப்பந்தத்தை இறுதி செய்ததாகவும் குறிப்பிடத்தக்கது.