சீன ராணுவ அதிகாரி மீது அணு ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய்விட்டதாக குற்றச்சாட்டு
சீனாவின் அணு ஆயுத திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய ரகசிய தகவல்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டதாகவும், உயர் ராணுவ அதிகாரிகளை பதவி உயர்வு செய்ய லஞ்சம் பெற்றதாகவும் சீன ராணுவத்தின் ஒரு உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெனரல் ஜாங் யூஷியா, சீன ராணுவத் தளபதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத்தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே அதிபர் ஜி ஜின்பிங்கின் நெருங்கிய உறவினர் என அறியப்பட்ட ஜாங் யூஷியாவுக்கு எதிராக இக்குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
அவரின் மீது, சீனாவின் அணு ஆயுத திட்டத்தின் தொழில்நுட்ப ரகசியங்களை வெளிநாட்டுக்கு கசியவிட்டதாகவும், பதவி உயர்விற்கு லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்காக சீன தேசிய ராணுவ அமைச்சகம், ஒழுக்கச் சீர்மரியாதை மற்றும் சட்ட மீறல் காரணமாக ஜாங் யூஷியாவை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
ஆனால், அணு ரகசியங்கள் கசிய விட்டதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை சீனா அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.