அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது : மகாராஷ்டிராவில் பரபரப்பு
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராமதி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு நடைபெற இருந்த நான்கு பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக அஜித் பவார் அந்த விமானத்தில் சென்றதாக தகவல் தெரிவிக்கிறது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அஜித் பவார் கடுமையாக காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி, மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.