வாரத்தில் ஐந்து நாள் வேலை கோரிக்கை : நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை முன்வைத்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.