சீனாவுடன் முழுமையான ஒப்பந்தமில்லை : கனடா பிரதமர் விளக்கம்
சீனாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட கனடாவிற்கு எந்தத் திட்டமும் இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவுடன் அண்மையில் செய்யப்பட்ட உடன்பாடு முழுமையான வர்த்தக ஒப்பந்தமாக இல்லையெனவும், குறிப்பிட்ட சில துறைகளில் நீண்ட காலமாக இருந்து வந்த வரி தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக ஒப்பந்தம் மட்டுமே என்றும் விளக்கம் அளித்தார்.