இந்தியாவில் முதலீடு செய்ய உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்தியாவை முதலீட்டு இலக்காகத் தேர்வு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியா விரைவில் உலகளவில் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக உருவெடுக்கும் என்றும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் எரிசக்தித் துறையில் இந்தியா தன்னிறைவு நிலையை அடைந்து வருவதாகவும் கூறினார்