RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் – அரசியல் வட்டாரங்களில் வாழ்த்துகளும் விமர்சனங்களும்
ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பீகார் முன்னாள் முதலமைச்சரும், RJD நிறுவனர் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், வயது மூப்பு காரணமாக தீவிர அரசியல் பணிகளில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய பொறுப்புகள் தேஜஸ்வி யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்களின் முன்னிலையில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. RJD-யின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு இது முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேஜஸ்வி யாதவின் சகோதரி ரோகிணி ஆச்சார்யா யாதவ், இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கட்சியின் தலைமையியல் மாற்றம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவரது கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேஜஸ்வி யாதவ் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில், RJD கட்சியின் எதிர்கால அரசியல் திசை குறித்து ஆதரவாளர்களும் விமர்சகர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புதிய பொறுப்பை ஏற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கு அரசியல் பயணத்தில் பொறுப்புணர்வும் தெளிவான தலைமையும் அமைய வாழ்த்துகள்.
இந்த நியமனம் பீகார் அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கட்டும்.