வங்கதேசத்தை முகமது யூனுஸ் சீரழித்துவிட்டார் – ஷேக் ஹசீனா கடும் விமர்சனம்

Date:

வங்கதேசத்தை முகமது யூனுஸ் சீரழித்துவிட்டார் – ஷேக் ஹசீனா கடும் விமர்சனம்

வங்கதேசத்தை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு சீரழித்துவிட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் வெடித்த அரசியல் போராட்டங்களின் தொடர்ச்சியாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறினார். அதன் பின்னர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தலை முன்னிட்டு கருத்து தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா, முகமது யூனுஸை மக்களின் விரோதி, பண மோசடி செய்பவர், அதிகாரப் பசி கொண்ட துரோகி என கடுமையாக விமர்சித்துள்ளார்.

வங்கதேசம் தற்போது பாதாளத்தின் விளிம்பில் நிற்பதாகவும், விடுதலைப் போரின் மூலம் பெற்ற தாய்நாடு, தீவிரவாத மற்றும் வகுப்புவாத சக்திகள், வெளிநாட்டு சதிகாரர்களின் தாக்குதலால் சீரழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கதேசத்தில் ஜனநாயகம் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.

முகமது யூனுஸ் தலைமையிலான சட்டவிரோத ஆட்சியை அகற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?” – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

“தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?” –...

நாட்டின் 77-வது குடியரசு தின வாழ்த்துகள்

நாட்டின் 77-வது குடியரசு தின வாழ்த்துகள் நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று...

RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் – அரசியல் வட்டாரங்களில் வாழ்த்துகளும் விமர்சனங்களும்

RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் – அரசியல் வட்டாரங்களில்...

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம்: இபிஎஸ் போராட்ட அறிவிப்பு – திமுக திறப்பு தேதி அறிவிப்பு

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம்: இபிஎஸ் போராட்ட அறிவிப்பு – திமுக...