திடீரென தீப்பற்றி எரிந்த ஓலா இ-ஸ்கூட்டர் – தந்தை, மகன் நூலிழையில் உயிர்தப்பினர்
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தந்தை மற்றும் மகன் நூலிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
சோலாப்பூரை சேர்ந்த நபர் ஒருவர், பள்ளியில் இருந்து மகனை அழைத்து செல்லுவதற்காக சாலையோரத்தில் தனது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் கிளம்ப தயாராகிய போது, ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வெளியேறியது.
இதனை கவனித்த அந்த நபர் உடனடியாக மகனை அழைத்துக் கொண்டு பாதுகாப்பான தூரத்திற்கு சென்றுள்ளார். சில நிமிடங்களில் ஸ்கூட்டரின் பின்புறத்தில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஸ்கூட்டர் மீது தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாமல் தந்தையும் மகனும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.