ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் நோக்கம் – பிரதமர் மோடி விளக்கம்
ஏஐ தாக்க (AI Impact) உச்சி மாநாடு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களையும் சாதனைகளையும் உலகிற்கு எடுத்துரைக்கும் முக்கிய மேடையாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத்தின் 130வது அத்தியாயத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியின் 10வது ஆண்டு நிறைவை முன்னிலைப்படுத்தி பேசினார்.
2016ஆம் ஆண்டு 500க்கும் குறைவான ஸ்டார்ட்அப்களுடன் தொடங்கிய இந்திய ஸ்டார்ட்அப் சூழலமைப்பு, தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாக வளர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் பயனாக, இந்தியா இன்று உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலமைப்பாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், பஜனைகள் மற்றும் கீர்த்தனைகள் பல நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சாரத்தின் ஆன்மாவாக இருந்து வருவதாகக் கூறிய அவர், ஜென்-இசட் தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் பஜன் கிளப்பிங் கலாச்சாரத்தை பாராட்டினார்.
பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஏஐ தாக்க உச்சி மாநாடு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் உலகளாவிய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என்றும்,
இந்த மாநாடு மக்கள் – பூமி – முன்னேற்றம் என்ற மூன்று அடிப்படை சூத்திரங்களை மையமாகக் கொண்டு நடைபெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.