ரீ-ரிலீஸ் வசூலில் ‘கில்லி’ சாதனையை முறியடித்த ‘மங்காத்தா’
மீண்டும் திரையரங்குகளில் வெளியான விஜய் நடித்த ‘கில்லி’ படத்தின் வசூல் சாதனையை, அஜித் நடிப்பில் உருவான ‘மங்காத்தா’ திரைப்படம் தற்போது முறியடித்துள்ளது.
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மங்காத்தா’ படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், ரசிகர்கள் அதனை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘மங்காத்தா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் படி, தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ.4.65 கோடி வசூலித்துள்ளதாகவும், இந்திய அளவில் ரூ.5 கோடியைத் தாண்டிய வருமானம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு, ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படங்களில் அதிக வசூல் பெற்ற படமாக விஜய் நடித்த ‘கில்லி’ ரூ.4.23 கோடி வசூலித்து முன்னிலையில் இருந்தது.
ஆனால் தற்போது, அந்த சாதனையை ‘மங்காத்தா’ படம் முந்தி, ரீ-ரிலீஸ் வசூலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது.