பட்ஜெட் கூட்டத்தொடர் : 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் – மத்திய அரசு அறிவிப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, வரும் 27ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடக்க நாளில், நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டும் அதேபோல் பிப்ரவரி 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடரை சீராக நடத்துவது குறித்து விவாதிக்க, வரும் 27ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டம், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.