அதிமுக வேட்பாளர் தேர்வு – விருப்ப மனு அளித்தவர்களிடம் இபிஎஸ் நேரடி பேட்டி
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் நேர்காணல் நடத்தினார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக தலைமையிடம் மொத்தம் 10,175 பேர் விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருந்தனர். அவற்றில் தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த 9ஆம் தேதி தொடங்கின.
அதனைத் தொடர்ந்து 12ஆம் தேதி நடைபெற இருந்த நேர்காணல், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் மீண்டும் தொடங்கியது.
இந்த கட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருவண்ணாமலை வடக்கு மற்றும் திருவண்ணாமலை தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விருப்ப மனு அளித்தவர்களின் அரசியல் அனுபவம், அந்தந்த தொகுதிகளின் தற்போதைய நிலை, மேலும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்