‘டியூட்’ ரூ.100 கோடி வசூல் — பிரதீப் ரங்கநாதனின் ஹாட்ரிக் சாதனை!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டியூட்’ உலகளவில் ரூ.100 கோடி வசூலையைக் கடந்துள்ளது.
மமிதா பைஜு மற்றும் பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்தில் சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டிராவிட் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு நிகேத் பொம்மி, இசை சாய் அபயங்கர் என அமைந்துள்ளது. தீபாவளி முன்பு, அக்டோபர் 17-ஆம் தேதி படம் வெளியானது.
முதல் நாளே உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்த இப்படம், இரண்டு நாளில் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்தது.
அடுத்து, ஆறு நாட்களுக்குள் படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு பாகமும் சிறந்த வசூலை பதிவு செய்துள்ளது.
சினிமா நிபுணர்கள் தெரிவிப்பது போல, ஹீரோவாக அறிமுகமான முதல் மூன்று படங்களும் ரூ.100 கோடிக்கு வசூல் செய்யும் சாதனை இந்தியாவில் இதுவே முதல் முறையே ஆகும். ஜென் ஸீ தலைமுறையினரை ஈர்க்கும் படங்களை தொடர்ச்சியாக வழங்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு தனித்த ரசிகர் கூட்டமும் உருவாகி உள்ளது.