ஆஸ்கார் வரலாற்றில் புதிய மைல்கல் – டைட்டானிக் சாதனையை பின்னுக்குத் தள்ளிய ‘சின்னர்ஸ்’
16 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, இதுவரை எந்தத் திரைப்படமும் எட்டாத உயரத்தை ‘சின்னர்ஸ்’ திரைப்படம் எட்டியுள்ளது.
இயக்குநர் ரையன் கூக்லர் இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் உள்ளிட்ட 16 ஆஸ்கர் விருது பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் ‘ஆல் அபவுட் ஈவ்’, ‘டைட்டானிக்’, ‘லாலா லேண்ட்’ ஆகிய திரைப்படங்கள் தலா 14 பிரிவுகளில் மட்டுமே ஆஸ்கார் பரிந்துரைகளை பெற்றிருந்தன. அந்த சாதனையை தற்போது ‘சின்னர்ஸ்’ முறியடித்து, ஆஸ்கார் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.
இதனிடையே, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஸ்கார் போட்டியில் இடம்பெற்றிருந்த ஜான்வி கபூர் நடித்த ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகாததால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.