இன்போ எட்ஜ் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக விஐபி சூட்கேஸ் மற்றும் ஸ்வீட் பாக்ஸ்
பிரபலமான இன்போ எட்ஜ் நிறுவனம், தனது பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பரிசுத் தொகுப்புகளை வழங்கியுள்ளது. இதில் விஐபி சூட்கேஸ், ஸ்வீட் பாக்ஸ் மற்றும் தீப விளக்கு அடங்கியவை உள்ளன.
பணியாளர்கள் வெளியிட்ட தகவலின் படி, “அலுவலகம் நுழைந்தவுடன் ஒவ்வொரு மேசையிலும் கம்ப்யூட்டர் பதிலாக அழகாக அலங்கரிக்கப்பட்ட சூட்கேஸ், அதனுடன் ஸ்வீட் பாக்ஸ் மற்றும் தீப விளக்கு அடுக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த ஒவ்வொரு பணியாளரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனைப் பார்த்த இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலர், “எங்களுக்கு எப்போதும் இதுபோல தீபாவளி பரிசுகள் கிடைக்கும்?” எனக் காத்திருப்பதாக பதிவிட்டுள்ளனர்.
நொய்டாவில் 1995-ஆம் ஆண்டு சஞ்சீவ் பிக்சந்தானி நிறுவிய இந்நிறுவனம் தற்போது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை புள்ளிவிவரப்படி, இன்போ எட்ஜ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ. 86,447 கோடி ஆகும்.