பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெற்றோர்களின் பாதங்களைத் துதி செய்து ஆசி பெற்றனர்
மயிலாடுதுறை அருகே, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எதிர்நோக்கும் மாணவர்கள், தங்களது பெற்றோர்களின் பாதங்களில் பூஜை செய்து மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளன.
இதனை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை மேற்கொள்ளும் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது.
வரவிருக்கும் பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன், மாணவர்கள் தங்களது பெற்றோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றனர்.