ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்றுச் சிறப்பு ஒப்பந்தம் – உலக வர்த்தகத்தில் இந்தியா முன்னணிக்கு, அதிர்ச்சியில் அமெரிக்கா!

Date:

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்றுச் சிறப்பு ஒப்பந்தம் – உலக வர்த்தகத்தில் இந்தியா முன்னணிக்கு, அதிர்ச்சியில் அமெரிக்கா!

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம், உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

சுங்க வரிகள், வர்த்தக ஒதுக்கீடுகள், விதிமுறை தடைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை குறைப்பதற்காக, பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி பரிமாறிக்கொள்ள ஏதுவான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுவார்த்தைகளை தொடங்கின.

2007 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், சந்தை அணுகல், வரி விதிப்புகள், அறிவுசார் சொத்து உரிமைகள், தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் போன்ற விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது.

பின்னர் 2022-ம் ஆண்டு மீண்டும் தொடங்கிய கலந்துரையாடல்களில், சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்கவும், நிலைத்தன்மை கொண்டதாகவும், அதிக பொருளாதார பலனை தரக்கூடியதாகவும் மாற்றும் வகையில், புதிய இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்த ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகு, பேச்சுவார்த்தைகள் மேலும் வேகமடைந்தன.

சமீபத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் மரோஸ் ஷெஃப்கோவிச்சை சந்தித்ததைத் தொடர்ந்து, இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு நெருங்கியுள்ளது.

ஒப்பந்தத்தில் உள்ள 24 பிரிவுகளில் 20 பிரிவுகள் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், வரும் 27-ஆம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முன்னிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஏற்கனவே வலுவான வர்த்தக உறவு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தக மதிப்பு 136.53 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதில், இந்தியா 75.85 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதுடன், 60.68 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 17 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கே செல்கிறது. அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு சுமார் 9 சதவீதமாக உள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம், சுமார் 200 கோடி மக்களை உள்ளடக்கிய மிகப்பெரிய சந்தை உருவாகும் என்பதால், இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமாக அமையும் என உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு சுமார் 25 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இவற்றில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தமே அனைத்திற்கும் அடிப்படையானது என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்கும், நம்பகத்தன்மை கொண்ட மற்றும் அதிக லாபத்தை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாகக் கொண்டு, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள சூழலில், இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு மாற்று மற்றும் பன்முக வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக வர்த்தக சமநிலையையே மாற்றும் சக்தியாக இந்த ஒப்பந்தம் அமையும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் பேர் திரள வேண்டும் – எச். ராஜா

பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் பேர் திரள வேண்டும்...

அதிமுக தனது அரசியல் திட்டங்களை உருவாக்க யாரையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை… எடப்பாடி பழனிசாமி

அதிமுக தனது அரசியல் திட்டங்களை உருவாக்க யாரையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம்...

விவேகானந்தர் பாறையை மீட்டெடுத்த லட்சுமணன் ஜி இறைவன் அடி சேர்ந்தார்

கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த மூத்த சேவகர் லட்சுமணன் ஜி (வயது...

ட்ரம்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிம்மதி செய்தி! – ட்ரம்பின் திமிர் அரசியலுக்கு விரைவில் முடிவு?

ட்ரம்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிம்மதி செய்தி! – ட்ரம்பின் திமிர் அரசியலுக்கு...