தமிழகத்தில் கூடுதலாக 3 அம்ரித் பாரத் ரயில்கள் – பிரதமர் நாளை கொடி அசைக்கிறார்
தமிழகத்தில் மேலும் மூன்று அம்ரித் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்கு முன்னதாக, கடந்த மாதம் 17ஆம் தேதி தமிழகத்தில் மூன்று அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கத் தொடங்கப்பட்டன. அந்த வரிசையில் தற்போது கூடுதலாக மேலும் மூன்று ரயில் சேவைகள் அறிமுகமாக உள்ளன.
இந்த புதிய ரயில்கள் நாகர்கோவில் – மங்களூரு, தாம்பரம் – திருவனந்தபுரம் மற்றும் திருவனந்தபுரம் முதல் தமிழகம் வழியாக தெலங்கானா மாநிலம் சர்வபள்ளி வரை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்ரித் பாரத் ரயில்கள் எந்த நாட்களில் இயக்கப்படும் என்பது தொடர்பான முழு விவரங்களும் ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.