“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாரும் பாதுகாக்க முடியாது” – அதிபர் ட்ரம்ப்
அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை எந்த நாடும் பாதுகாக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து, டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் நன்றியற்ற முறையில் நடந்து கொண்டிருப்பதாகவும், அதனை தனது நாட்டின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா மட்டுமே காப்பாற்றக்கூடும் எனக் குறிப்பிட்டார்.
அதேபோல், கிரீன்லாந்து அமெரிக்காவின் வடக்கு பகுதிக்குட்பட்ட ஒரு பகுதியாகும்; அதனை கைப்பற்ற ராணுவம் பயன்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.
டிரம்ப் கூறியதாவது, அமெரிக்கா விரும்பும் நிலையில், கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை டென்மார்க் நாட்டிலிருந்து மாற்றி கொண்டிருப்பதே அவரது பிரதான இலட்சியம் ஆகும்.