அடம்பிடிக்கும் டிரம்ப் – ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பு

Date:

அடம்பிடிக்கும் டிரம்ப் – ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பு

கிரீன்லாந்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றுபட்டு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்து தொடர்பாக வெளியிட்ட கருத்துகளை, நெருங்கிய நட்பு நாடான பிரான்ஸ் வெளிப்படையாக கிண்டல் செய்துள்ளது.

கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்றும், அதற்கு எதிராக நிற்கும் நாடுகளுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அச்சுறுத்தி வரும் சூழலில், டென்மார்க்கும், நேட்டோ உறுப்புநாடுகளும் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளன. அமெரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிய மறுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்காவுடன் நடைபெற்று வந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதற்கும் தயாராக உள்ளன.

இந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பிரிட்டன், ஜெர்மனி, சுவீடன், பிரான்ஸ், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 10 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமாகும் வரை இந்த வரி நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் உறுதியுடன் இருக்கும் டிரம்ப், ஆர்க்டிக் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளிடமிருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காகவே கிரீன்லாந்து அவசியம் என காரணம் கூறி வருகிறார்.

இதற்கு பதிலளித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், “பூச்சியைப் பயந்து வீட்டையே எரிப்பதுபோல் டிரம்பின் நிலைப்பாடு உள்ளது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், பெற்றோரிடம் போய் எதையும் அடம்பிடித்து கேட்கும் குழந்தையைப் போல், உலக நாடுகளை தன் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டிப்படைக்க டிரம்ப் முயல்வதாகவும், பிரான்ஸ் அதிபர் நேரடியாக கேலி செய்திருப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்க்டிக் பகுதிகளில் அமெரிக்காவின் தீவிர நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்ற அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்டின் விளக்கத்திற்கு, பிரான்ஸ் கடுமையான பதிலை அளித்துள்ளது. “ஒருநாள் தீ விபத்து ஏற்படலாம் என்பதற்காக, இப்போதே வீட்டை எரிப்பது புத்திசாலித்தனமா?” என பிரான்ஸ் விமர்சனம் செய்துள்ளது.

இதற்கு முன், காசா அமைதி வாரியத்தில் இணைவதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மறுத்திருந்தார். இதன் மூலம் இரு தரப்புகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்தது.

இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, பிரான்ஸ் அதிபரை யாரும் விரும்பவில்லை என்றும், அவர் விரைவில் பதவியில் இருந்து விலக நேரிடும் என்றும் டிரம்ப் விமர்சித்தார். மேலும், பிரான்ஸ் தயாரிக்கும் ஒயின் மற்றும் ஷாம்பெயின் பொருட்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த மேக்ரான், பிரான்ஸின் வெளிநாட்டு கொள்கையில் தலையிடும் நோக்கில் விடப்படும் வரி மிரட்டல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அவை எந்த பயனையும் தராது என்றும் கூறினார்.

இதனிடையே, கிரீன்லாந்தை கைப்பற்றும் எந்தவொரு நடவடிக்கையும் ஐரோப்பிய ஒன்றியம் – அமெரிக்கா இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை கடுமையாக பாதிக்கும் என பிரான்ஸ் நிதியமைச்சர் ரோலண்ட் லெஸ்கூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில், இருதரப்புகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அமெரிக்காவுடன் ஐரோப்பா இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டிரம்பின் வரி மிரட்டல்களால் ஐரோப்பிய ஒன்றியம் எந்த விதத்திலும் அச்சப்படாது என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உறுதியாக கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன் உறவுகள் மேலும் மோசமானால், ஐரோப்பிய ஒன்றியம் தனது சக்திவாய்ந்த வர்த்தக பழிவாங்கும் கருவியான “ட்ரேட் பசூக்கா” (Trade Bazooka) பயன்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரானை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் திட்டம்? – மத்திய கிழக்கில் போர் தயார் நிலை

ஈரானை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் திட்டம்? – மத்திய கிழக்கில் போர்...

நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு இனி மக்களவை...

ஐக்கிய அரபு அமீரக தலைவருக்கு கலைநயம் கொண்ட ஜூலா ஊஞ்சல் வழங்கல்

ஐக்கிய அரபு அமீரக தலைவருக்கு கலைநயம் கொண்ட ஜூலா ஊஞ்சல் வழங்கல் இந்தியாவிற்கு...

வாணியம்பாடி அருகே வயதான பெண் கொலை – இரண்டு வாரங்களாக தப்பித்த இளைஞர் கைது

வாணியம்பாடி அருகே வயதான பெண் கொலை – இரண்டு வாரங்களாக தப்பித்த...