ஐக்கிய அரபு அமீரக தலைவருக்கு கலைநயம் கொண்ட ஜூலா ஊஞ்சல் வழங்கல்
இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாக வருகை தந்த ஐக்கிய அரபு அமீரக நாட்டுத் தலைவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஜூலா ஊஞ்சலை நினைவுப் பரிசாக வழங்கினார்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகம்மது சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பிரதமர் மோடியுடன் நேரடியாக சந்தித்து, இரு நாடுகளுக்கும் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய கைவினை நிபுணர்கள் வடிவமைத்த, அழகிய கலைச் சிறப்புடன் கூடிய ஜூலா ஊஞ்சலை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.