இந்தியாவை தனியாக குறிவைக்கும் அமெரிக்க நடவடிக்கை அநியாயம் – ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
இந்தியாவை மட்டும் நோக்கி அமெரிக்கா பொருளாதார தடைகள் விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், உக்ரைன் – ரஷ்யா மோதல் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மற்றும் நிலைப்பாடு ஏற்கனவே பலமுறை உலக நாடுகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் நோக்கில், இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அழுத்தம் கொடுப்பது நியாயமற்ற செயல் என அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவின் உரிமை என்றும், அதில் தலையீடு செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் ஜெய்சங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.