TTT திரைப்படம் எனக்கு மறுமலர்ச்சி அளித்தது – நடிகர் ஜீவா
தலைவர் தம்பி இயக்கத்தில் உருவான திரைப்படம், தனது திரைவாழ்க்கையில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதாக நடிகர் ஜீவா கூறியுள்ளார்.
கோவையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் ஜீவா, இயக்குநர் தலைவர் தம்பி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு ரசிகர்களை சந்தித்தனர். அப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் ஊடகங்களை சந்தித்த நடிகர் ஜீவா, அடுத்ததாக முருகனை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஒரு முக்கிய நபருடன் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.