பாஜக தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் நிதின் நபின்

Date:

பாஜக தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் நிதின் நபின்

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

பாஜக தேசிய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை சமீபத்தில் கட்சி தலைமையகம் வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படையில், ஜனவரி 19ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பாஜக தேசிய செயல் தலைவர் பொறுப்பில் இருக்கும் நிதின் நபின், தேசிய தலைவர் பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக கட்சியைச் சேர்ந்த 37 பேர் தனித்தனியாக வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.

வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கோவையில் கொடூரம்: திருமணம் தாண்டிய உறவு தகராறில் கணவர் கடத்திக் கொலை – 4 பேர் கைது!

கோவையில் கொடூரம்: திருமணம் தாண்டிய உறவு தகராறில் கணவர் கடத்திக் கொலை...

காக்கவிளை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் – கிருஷ்ண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்: பக்தி பரவசத்துடன் நடைபெற்றது!

காக்கவிளை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் - கிருஷ்ண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்:...

“வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பே இல்லை”: விஜய் மற்றும் தவெக மீது வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

"வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பே இல்லை": விஜய் மற்றும் தவெக மீது வானதி...

தென்னை உற்பத்தியைப் பெருக்கப் புதிய வியூகம்: மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் அதிரடி அறிவிப்பு!

தென்னை உற்பத்தியைப் பெருக்கப் புதிய வியூகம்: மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங்...