சேலம் புறநகரில் போலீஸ் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல் – இளைஞர் கைது
சேலம் அருகே உள்ள சாமிநாதபுரம் பகுதியில், கடமையில் இருந்த காவலரை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக பணியாற்றி வரும் சண்முகம் என்பவர், சிறப்பு உதவி ஆய்வாளர் பிச்சமுத்துவுடன் வழக்கு தொடர்பான விசாரணைக்காக சாமிநாதபுரம் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, மதுபோதையில் அப்பகுதியில் அலைந்துகொண்டிருந்த ஸ்ரீநாத் என்ற இளைஞர், திடீரென சண்முகத்தை தாக்கி, அவரது முகத்தில் பலத்த குத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த காவலர் சண்முகம் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் ஸ்ரீநாத்தை கைது செய்து, மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.