திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம் – கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் தெப்பத் திருவிழா, இன்று ஆன்மீக முறைகளுடன் கொடியேற்ற நிகழ்ச்சியால் தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் இந்த பாரம்பரிய திருவிழா, இந்த ஆண்டும் வழக்கம்போல் வேத பாராயணங்கள் முழங்க பக்தர்களின் பக்தியோடு ஆரம்பமானது.
விழாவை முன்னிட்டு, கோயிலின் கம்பத்தடி மண்டபத்தில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் தெய்வானை அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் தெப்ப உற்சவம், வரும் 28ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.