இந்திய பினாகா ராக்கெட்டுகளுக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பு
இந்தியாவில் தயாரிக்கப்படும் பினாகா ராக்கெட் அமைப்புகளை வாங்க பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் அமைந்துள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில், பினாகா ராக்கெட் தயாரிப்பு மையத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், பினாகா ராக்கெட் அமைப்புகளை கொள்முதல் செய்ய ஆர்மினியா தயாராக உள்ளதாகவும், இதேபோல் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் இந்த தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த வளர்ச்சி இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறனை மேலும் உறுதிப்படுத்துவதாகவும், “மேக் இன் இந்தியா” முயற்சிக்கு புதிய அடையாளமாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.