கோலாகலமாக கொண்டாடப்பட்ட பட்டம் பறக்கும் திருவிழா
குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பட்டம் பறக்கும் திருவிழா, “உத்தராயண்” என்ற பெயரில் பிரசித்தி பெற்றதாகும். மகர சங்கராந்தியை முன்னிட்டு நடைபெறும் இந்த விழா, சர்வதேச அளவில் கவனம் பெறும் பெரும் கொண்டாட்டமாக திகழ்கிறது.
அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்களில், வண்ண வண்ணமான பட்டங்கள் ஆகாயத்தில் பறக்கவிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழா குஜராத் மக்களின் பாரம்பரிய மற்றும் கலாசார அடையாளமாகக் கருதப்படுகிறது.
இதே நேரத்தில், பட்டம் பறக்கும் போது பயன்படுத்தப்படும் மாஞ்சா நூலால் பறவைகள் பாதிக்கப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு குஜராத் முழுவதும் நடைபெற்ற உத்தராயண் விழாவின் போது, மாஞ்சா நூலில் சிக்கி 5,400-க்கும் அதிகமான புறாக்கள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, ‘கருணா அபியான்’ திட்டத்தின் கீழ் செயல்படும் தன்னார்வ அமைப்புகள், காயமடைந்த பறவைகளை மீட்டு உடனடி சிகிச்சை அளித்து பாதுகாத்துள்ளனர்.