சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு
மகர விளக்கு பூஜை நிறைவடைவதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுதினம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற கோயில் நடை, கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டதாகவும், மகரஜோதி தரிசனம் கடந்த 14ம் தேதி நடைபெற்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் வரும் 20ம் தேதி நிறைவடைய உள்ளது. அதன்படி அன்றைய தினம் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, காலை 6:30 மணிக்கு கோயில் நடை மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் நாளை வரை மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.