நாட்டின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துள்ளது – பிரதமர் மோடி விமர்சனம்
காங்கிரஸ் கட்சியின் எதிர்மறை அரசியலை மக்கள் நிராகரித்து வருவதை மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கலியாபோரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கவுகாத்தி–ரோத்தக் மற்றும் திப்ரூகர்–லக்னோ இடையேயான இரண்டு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதேபோல், காசிரங்கா தேசிய பூங்கா வழியாக செல்லும் புதிய மேம்பால வழித்தடத் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், வளர்ச்சியை முன்வைக்காத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்மறை அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளதாகவும் கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லாததால், அந்த கட்சி நாட்டின் மக்கள் நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.