அசாம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
மேற்கு வங்க மாநிலப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அசாம் மாநிலத்திற்கு சென்றடைந்து கவுகாத்தி நகரில் ரோடு ஷோவில் பங்கேற்றார்.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, முதற்கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா பகுதியில், நாட்டின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அசாம் சென்ற பிரதமர் மோடி, கவுகாத்தி நகரில் திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள், பாஜக கொடிகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, சாருசஜாய் மைதானத்தில் நடைபெற்ற ‘பகுரும்பா த்வோ’ கலாச்சார விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மைதானத்தில் வாகனத்தில் சுற்றி வந்த பிரதமரை மக்கள் கைதட்டி வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அவர் ஆர்வமுடன் கண்டு ரசித்தார்.