“மும்பையில் டிரிபிள் என்ஜின் அரசு உருவாகியுள்ளது” – பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா
மும்பையில் புதிய வளர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், மும்பை மாநகராட்சியில் பாஜகவுக்கு இனிப்பான “ரசமலாய்” போன்ற வெற்றி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள தேஜஸ்வி சூர்யா, இந்த வெற்றியின் மூலம் நகரில் வளர்ச்சியை முன்னெடுக்கக்கூடிய டிரிபிள் என்ஜின் அரசு அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் வெற்றிக்காக தன்னலமின்றி உழைத்த அனைத்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.