யுஎஸ் ஓபன் ஸ்குவாஷில் அபய் சிங் தோல்வி
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீரர் அபய் சிங் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தார்.
உலகத் தரவரிசையில் 30வது இடத்தில் உள்ள அபய் சிங், 4வது இடத்தில் உள்ள வேல்ஸ் நாட்டின் ஜோயல் மாகினுடன் மோதினார். இதில் அபய் 2-11, 5-11, 4-11 என்ற செட் கணக்கில் பின்னடைந்து வெளியேறினார்.