“திருக்குறள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் உயரிய சிந்தனைகளையும், காலத்தால் அழியாத இலக்கியப் படைப்புகளையும் வழங்கிய மகத்தான அறிஞர் திருவள்ளுவருக்கு எனது ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறேன்.
ஒற்றுமையும் இரக்கமும் நிறைந்த சமுதாயமே மனிதகுலத்தின் அடையாளம் என அவர் உறுதியாக நம்பினார்.
தமிழ் பண்பாட்டின் உன்னத மதிப்புகளை உலகிற்கு வெளிப்படுத்திய முன்னோடியாக திருவள்ளுவர் திகழ்கிறார்.
அத்தகைய திருவள்ளுவப் பெருந்தகையின் பேரறிவையும், மனித நேயத்தையும் எடுத்துரைக்கும் திருக்குறள் நூலை அனைவரும் அவசியமாக வாசித்து வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.