எக்ஸ் தளத்தின் ஏஐ கருவி ‘குரோக்’ மீது புதிய கட்டுப்பாடுகள்
எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளத்தில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு கருவியான ‘குரோக்’ மூலம் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றும் செயல்பாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குரோக் ஏஐ கருவியை பயன்படுத்தி பாலியல் தன்மை கொண்ட படங்கள் உருவாக்கப்படுவது அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட பலர் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த உலகளாவிய எதிர்ப்புகளின் பின்னணியில், புகைப்படங்களை தவறான முறையில் மாற்றும் வசதியை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, உண்மையான மனிதர்களின் புகைப்படங்களை எடிட்டிங் செய்து, அவர்களை ஆபாசமான தோற்றத்தில் காட்டும் வகையிலான உள்ளடக்கங்களை உருவாக்க அனுமதிக்காத வகையில், குரோக் ஏஐ கருவியில் தொழில்நுட்ப ரீதியான தடைகள் கொண்டு வரப்பட்டுள்ளன என எக்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது.