“நாட்டை முன்னெடுக்கும் கட்டத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது”
இந்தியாவில் பெண்களின் பங்கு இன்று வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதோடு மட்டுப்படாமல், நாட்டின் வழிகாட்டுதலை ஏற்கும் உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 28-வது காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் சட்டமன்றத் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்திய ஜனநாயகம் பன்முகத்தன்மையால் செழுமை பெற்றதாக விளக்கினார்.
நாட்டின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன என்றும், இத்தகைய உயிரோட்டமும் பல்வகை தன்மையும் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான வலிமையாக திகழ்கிறது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் குழு புகைப்படத்தில் பங்கேற்றதுடன், ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து கை குலுக்கி அன்பையும் நட்பையும் பரிமாறிக் கொண்டார்.