78-வது ராணுவ தினம் : கோலாகலமாக நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்வுகள்
78-வது இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, ஆளுநர் ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு அணிவகுப்பை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மோப்ப நாய்களுடன் ராணுவ வீரர்கள் ஒழுங்காக அணிவகுத்துச் சென்றது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து, இருசக்கர வாகனங்களில் வீரர்கள் நிகழ்த்திய சாகசக் காட்சிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
வாகனங்களில் நின்றபடியும், கைகளை தலைக்கு மேலே உயர்த்தியவாறும் வீரர்கள் செய்த சாகசங்கள், ராணுவத்தின் தைரியத்தையும் திறமையையும் வெளிப்படுத்தின.