அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் விடுத்த கொலை அச்சுறுத்தல்
ஈரானில் நடைபெறும் உள்நாட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை குறிவைத்து, ஈரான் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் காயமடைந்த சம்பவத்தின் புகைப்படத்தை ஈரான் அரசு தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்பியது. அதனுடன், “இந்த முறை தோட்டாக்கள் இலக்கை தவறாது” எனும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையையும், கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.