தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆர்ஜேடி முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்
மோசடி வழக்கில் குற்றவாளியாக 2022-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்த ஆர்ஜேடி முன்னாள் தலைவர் அனில் சஹானி பாஜகவில் சேர்ந்தார். மூன்று ஆண்ட்களுக்கு முன்பு பிஹார் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர், தற்போது பாஜகவின் கூட்டணி மற்றும் மாநில செயல்பாடுகளில் பங்கு பெற உள்ளார்.
அனில் சஹானி, பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளராக இருக்கும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவ்டே முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார்.
2012-ஆம் ஆண்டு ஆர்ஜேடி சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருந்த போது போலி விமான டிக்கெட்டுகளை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் 2022-ஆம் ஆண்டு நீதிமன்றம் அனில் சஹானியை குற்றவாளி என்று தீர்த்தது. இதனால் அவர் பிஹார் எம்பியாக இருந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அனில் சஹானி பாஜகவில் இணைந்ததால், அவரது சொந்த மாவட்ட முசாபர்பூர் பகுதியில் உள்ள பின்தங்கிய ‘நிஷாத்’ சமூக வாக்குகளை பாஜக கவரும் வாய்ப்பு உள்ளது என கட்சி நம்புகிறது.