ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அவர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தப் பொங்கல் விவசாயிகளை மையமாகக் கொண்ட பண்டிகை என்றும், விவசாயிகளே இந்தியாவின் முதுகெலும்பு என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் இணைந்து நடிக்கும் தனது புதிய திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
அனைத்து தரப்பினரையும் கவரும் முழுமையான பொழுதுபோக்கு படமாக அந்த திரைப்படம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.