78வது இந்திய ராணுவ தினம்
இந்திய ராணுவத்தின் முதல் இந்தியர் தளபதியாக கே.எம். கரியப்பா பொறுப்பேற்ற நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.
78வது இந்திய ராணுவ தினமான இன்றைய நாளில், பகலோ இரவோ, கடும் வெயிலோ, கனமழையோ, உறைபனியோ எதையும் பொருட்படுத்தாமல், பாரத தேசத்தின் பாதுகாப்பே தங்கள் உயிர் நோக்கமாக கொண்டு, நாட்டின் எல்லைகளை பாதுகாத்து வரும் நமது வீரர்களையும், அவர்களுக்குப் பின்னால் துணையாக நிற்கும் குடும்பங்களின் அளப்பரிய தியாகத்தையும் மரியாதையுடன் நினைத்து போற்றுவோம்.