ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா – தொடரை காப்பாற்றும் போராட்டம் இன்று அடிலெய்டில்

Date:

ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா – தொடரை காப்பாற்றும் போராட்டம் இன்று அடிலெய்டில்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடரில் 0-1 என பின்தங்கியுள்ள இந்திய அணி, தோல்வி அடைந்தால் தொடரை இழக்கும் நெருக்கடியில் களமிறங்குகிறது.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. பெர்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மழை காரணமாக அடிக்கடி இடையூறு ஏற்பட்ட அந்த ஆட்டத்தில், ரோஹித் சர்மா (8), விராட் கோலி (0) உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயஸ் ஐயரிடமிருந்தும் எதிர்பார்த்த ஆட்டம் வெளிப்படவில்லை.

அக்சர் படேல், கே.எல். ராகுல் ஆகியோர் சிறிதளவு எதிர்ப்பு காட்டினாலும், இந்தியா போட்டியை சமநிலைக்கு கொண்டு வர முடியவில்லை. அறிமுக வீரர் நித்திஷ் ரெட்டி 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். பந்து வீச்சிலும் இந்திய அணி தாக்கம் செலுத்த முடியவில்லை. 131 ரன்கள் இலக்காகக் கொடுத்த நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எந்த கட்டத்திலும் அழுத்தம் உருவாக்க முடியவில்லை. ஹர்திக் பாண்டியா இல்லாதது அணியின் சமநிலையை பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய அணியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்படலாம்; வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா நீக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. தொடரை கைப்பற்றும் நோக்கில் அவர்கள் இன்று தீவிரமாக விளையாடப் போகின்றனர். மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் வேகப்பந்து வீச்சு இந்திய டாப் ஆர்டருக்கு மீண்டும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் ஆடம் ஸாம்பா மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மீண்டும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது. டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மேத்யூ ஷார்ட் ஆகியோரிடமிருந்து வலுவான பேட்டிங் எதிர்பார்க்கப்படுகிறது.

அடிலெய்டு – இந்திய அணிக்கான அதிர்ஷ்ட மைதானம்

அடிலெய்டு ஓவல் மைதானம் இந்திய அணிக்கு ராசியானதாக கருதப்படுகிறது. இதுவரை இங்கு விளையாடிய 15 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 9 வெற்றிகளை பெற்றுள்ளது; ஒரு போட்டி டையில் முடிந்தது. கடந்த 17 ஆண்டுகளாக இங்கு இந்திய அணி தோல்வியறியாது வருகிறது — கடைசியாக 2008 பிப்ரவரியில் தான் ஆஸ்திரேலியாவிடம் இங்கு தோல்வியடைந்தது.

தீவிர பயிற்சியில் ரோஹித் சர்மா

முதல் ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்த ரோஹித் சர்மா நேற்று அடிலெய்டு மைதானத்தில் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டார். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மேற்பார்வையில் த்ரோடவுன் நிபுணர்கள் தயானந்த் கரானி மற்றும் ராகவேந்திரா ஆகியோர் அவருக்கு கூடுதல் பயிற்சி அளித்தனர். விராட் கோலி இன்றைய பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை; ஆனால் செவ்வாயன்று அவர் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்திருந்தார்.

மைதான நிலை

அடிலெய்டு ஓவல் பெர்த் மைதானத்தைப் போல வேகம், பவுன்ஸ் அதிகமாக இல்லாது, பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்கும். பந்து அசைவு குறைவாகவும், பவுன்ஸ் சமமாகவும் இருப்பதால் பேட்ஸ்மேன்களுக்கு தங்கள் ஷாட்களை நம்பிக்கையுடன் விளையாட ஏற்ற சூழல் காணப்படும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

குமரியில் சூறைக்காற்றுடன் கனமழை: தாமிரபரணி, கோதையாறு ஆற்றங்கரைகளில் வெள்ள எச்சரிக்கை

குமரியில் சூறைக்காற்றுடன் கனமழை: தாமிரபரணி, கோதையாறு ஆற்றங்கரைகளில் வெள்ள எச்சரிக்கை கன்யாகுமரி மாவட்டத்தில்...

சென்னையில் தொடங்கியது கிக் பாக்ஸிங் சூப்பர் லீக்!

சென்னையில் தொடங்கியது கிக் பாக்ஸிங் சூப்பர் லீக்! தொழில்முறை கிக் பாக்ஸிங் போட்டியான...

“டென்மார்க்கில் குடியேறவில்லை” – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த டாப்ஸி பன்னு

“டென்மார்க்கில் குடியேறவில்லை” – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த டாப்ஸி பன்னு தமிழ், தெலுங்கு,...

காஸ் டேங்கர் லாரி ஒப்பந்தம் 2026 வரை நீடிப்பு – வேலைநிறுத்தம் வாபஸ்

காஸ் டேங்கர் லாரி ஒப்பந்தம் 2026 வரை நீடிப்பு – வேலைநிறுத்தம்...