12 நாட்களில் சபரிமலையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில், கடந்த டிசம்பர் 30 முதல் ஜனவரி 12 வரை நடைபெற்ற 12 நாட்களில், சுமார் பத்தரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டதாக தேவசம் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக, ஜனவரி 6ஆம் தேதி ஒரே நாளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 967 பேர் ஐயப்பனை வழிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் மற்ற தினங்களில் தினசரி சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.