ராமர் ஆலயம் சுற்றியுள்ள 15 கி.மீ. எல்லையில் அசைவ உணவுக்கு கட்டுப்பாடு
அயோத்தியில் அமைந்துள்ள ராமர் ஆலயத்தை மையமாகக் கொண்டு, 15 கிலோமீட்டர் வரையிலான பரப்பில் அசைவ உணவுகளை தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
புனித யாத்திரை நடைபெறும் வழித்தடங்களில் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் அசைவ உணவுகளை வழங்குவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி நகரத்தின் ஆன்மீகத் தூய்மையும், மத நம்பிக்கைகளும் பாதிக்கப்படாத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.