நாட்டின் இறையாண்மையை உயிர் இருக்கும் வரை காப்போம் – டிரம்ப் எச்சரிக்கைக்கு கியூபா அதிபர் பதில்
“உயிரில் கடைசி துளி ரத்தம் இருக்கும் வரையும் நாட்டின் சுதந்திரத்தை ஒப்படைக்க மாட்டோம்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்கு கியூபா அதிபர் பெர்முடேஸ் கடும் பதிலளித்துள்ளார்.
வெனிசுலாவை தொடர்ந்து, அதன் நெருங்கிய கூட்டாளியான கியூபாவுக்கு அமெரிக்கா தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்வினையாக கியூபா அதிபர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தனது அறிக்கையில், கியூபா ஒரு முழுமையான சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட நாடு என்றும், நாட்டின் செயல்பாடுகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை வெளிநாட்டு சக்திகள் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், மனித உயிர்களையே வணிகமாகப் பார்க்கும் நபர்களுக்கு, கியூபாவின் கொள்கைகள் மற்றும் சுதந்திரம் குறித்து பேச எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை எனவும் பெர்முடேஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.