உஜ்வாலா யோஜனா மூலம் 75% வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் வாயிலாக, இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்களில் 75 சதவீதத்திற்கும் சமையல் எரிவாயு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கோவையில் பாஜக ப்ரொபஷனல் பிரிவு ஏற்பாடு செய்த ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அந்தமான் பகுதியில் புதிதாக எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், பெண்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற அணுகுமுறை, தற்போது பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என்ற புதிய நிலைக்கு மாறியுள்ளதாகவும் ஹர்தீப்சிங் பூரி குறிப்பிட்டார்.
மேலும், உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் நாட்டின் 75 சதவீத குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளதாகவும், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் பெண்களில் சுமார் 80 சதவீதம் பேர் இந்தத் திட்டத்தின் பயனை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.