“ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தச் சொல்லுங்கள்” – அமெரிக்காவிடம் அவசர உதவி கோரிய பாகிஸ்தான்… வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்

Date:

“ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தச் சொல்லுங்கள்” – அமெரிக்காவிடம் அவசர உதவி கோரிய பாகிஸ்தான்… வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல்களின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், அமெரிக்காவை நாடி உதவி கேட்ட பாகிஸ்தான், இந்த நடவடிக்கையை நிறுத்தச் சொல்லி கெஞ்சியதாக வெளியான ஆவணங்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் இந்திய படைகளால் முற்றாக அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அனைத்தையும் இந்திய பாதுகாப்புப் படைகள் வானிலேயே தடுத்து வீழ்த்தின.

இதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் நூர் உள்ளிட்ட முக்கிய விமானப்படை தளங்களையும் இந்தியா தாக்கி சேதப்படுத்தியது. இந்த தொடர் தாக்குதல்களால் அச்சமடைந்த பாகிஸ்தான், இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியா தற்காலிகமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் தான், இந்தியா–பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறியிருந்தார். இதே கருத்தை அவர் இதுவரை 70 முறைக்கும் மேல் கூறி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் (FARA) கீழ் வெளியிடப்பட்ட ஆவணங்கள், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் அமெரிக்காவிடம் அவசர உதவி கோரியதை உறுதிப்படுத்துகின்றன. இந்திய தாக்குதல்களை தடுத்து நிறுத்த அமெரிக்கா தலையிட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதற்குப் பதிலாக, அமெரிக்காவுக்கு அதிக முதலீடுகளை வழங்கவும், நாட்டில் உள்ள முக்கிய கனிம வளங்களை ஒப்படைக்கவும் பாகிஸ்தான் முன்வந்ததாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம், உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளை 50-க்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சுமார் 5 மில்லியன் டாலர் செலவில் ஆறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, பென்டகன் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் 50-க்கும் மேற்பட்ட சந்திப்புகளை பாகிஸ்தான் ஏற்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் லாபியிஸ்ட்களுடன் சந்திப்புகள் மட்டுமின்றி, அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களில் நேர்காணல்கள் மற்றும் செய்தி கட்டுரைகள் வெளியாகவும் பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் பொது தொடர்பு செலவுகளை விட மூன்று மடங்கு அதிகமாக செலவிட்டு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் சந்திப்பையும் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்தியா–பாகிஸ்தான் இடையே மூன்றாவது நாடாக அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்றும், அமெரிக்காவும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தாலிபான் அமைப்பினரிடமிருந்தும் பாகிஸ்தான் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகக் கூறி, அதற்கும் அமெரிக்காவிடம் உதவி கோரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த அபே கேட் தாக்குதலுக்கு காரணமான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியை கைது செய்து அமெரிக்காவுக்கு ஒப்படைத்ததன் மூலம், தன் நிலைப்பாட்டை பாகிஸ்தான் நிரூபித்ததாகவும் அந்த ஆவணங்கள் கூறுகின்றன.

மொத்தத்தில், “இந்தியாவின் தாக்குதலை எப்படியாவது நிறுத்துங்கள்” என பாகிஸ்தான் அமெரிக்காவிடம் அழுத்தமாக வேண்டுகோள் வைத்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், இந்தியா–பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த மூன்றாவது நாட்டின் தலையீட்டையும் ஏற்க முடியாது என்று இந்தியா தெளிவாக மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா–பாகிஸ்தான் மோதல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் எந்த சமரச பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் டார் தெரிவித்திருந்தார். மேலும், இந்தியா மூன்றாம் நாட்டு தலையீட்டை விரும்பவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தன்னிடம் கூறியதாகவும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு எந்த நாட்டிடமும் கெஞ்சவில்லை; மாறாக, பாகிஸ்தான் தான் அமெரிக்காவிடம் உதவி கோரி மன்றாடியதாக உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மீனவர்கள் கடற்பயணம் மேற்கொள்ள வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மீனவர்கள் கடற்பயணம் மேற்கொள்ள வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அடுத்த...

மோடி ஆட்சியில் பெண்கள் வழிநடத்தும் வளர்ச்சி – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி உரை

மோடி ஆட்சியில் பெண்கள் வழிநடத்தும் வளர்ச்சி – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங்...

உஜ்வாலா யோஜனா மூலம் 75% வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி

உஜ்வாலா யோஜனா மூலம் 75% வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு – மத்திய...

காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எச்சரிக்கை

காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எச்சரிக்கை கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக...